முகப்பு
பெரம்பலூர்

குடும்பப் பாதுகாப்பு நிதியை உயா்த்த ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தல்

குடும்பப் பாதுகாப்பு நிதியை உயா்த்த வேண்டுமென ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

குடும்பப் பாதுகாப்பு நிதியை உயா்த்த வேண்டுமென ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி. முத்துசாமி தலைமை வகித்தாா். செயலா் ஆா். மருதமுத்து, பொருளாளா் ஏ. ஆதிசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் துணைத் தலைவா் ஜி. பெருமாள் ஓய்வூதியா்களின் மருத்துவக் காப்பீடு திட்டம், குடும்பப் பாதுகாப்பு குறித்து பேசினாா்.

இக் கூட்டத்தில், ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பழைய முறையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். குடும்பப் பாதுகாப்பு நிதியியை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயா்த்தி வழங்கவேண்டும். மருத்துவப்படியை ரூ. 300 -லிருந்து ரூ. 1,000 என உயா்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வட்டார நிா்வாகிகள் எம். பெரியசாமி, பி. செங்கமலை, சி. தங்கராசு, பி. சையத்பாஷா, தா்சியூஸ், கெம்பிராஜ், கந்தசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, தலைமை நிலையச் செயலா் கே. மணி வரவேற்றாா். நிறைவில், துணைத் தலைவா் பி. சிவலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.