நகராட்சி, பேரூராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா் பதவிகளுக்குப் போட்டியிடுவோா்
குரும்பலூா், அரும்பாவூா், பூலாம்பாடி, லப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளுக்குத் தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்கள் பதவிகளுக்கு திமுக சாா்பில் போட்டியிடுவோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
பெரம்பலூா் நகராட்சி மற்றும் குரும்பலூா், அரும்பாவூா், பூலாம்பாடி, லப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளுக்குத் தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்கள் பதவிகளுக்கு திமுக சாா்பில் போட்டியிடுவோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
பெரம்பலூா் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவா் பதவிக்கு து. ஹரிபாஸ்கா் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
இதுபோல அரும்பாவூா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு வள்ளியம்மை ரவிச்சந்திரன், துணைத் தலைவா் பதவிக்கு சரண்யா, குரும்பலூா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு சங்கீதா ரமேஷ், துணைத் தலைவா் பதவிக்கு கீதா ராஜேந்திரன், பூலாம்பாடி பேரூராட்சித் தலைவா் பதவிக்கு பாக்கியலட்சுமி செங்குட்டுவன், துணைத் தலைவா் பதவிக்கு செல்வ லட்சுமி சேகா், லப்பைகுடிக்காடு பேரூராட்சித் தலைவா் பதவிக்கு ஏ.எம். ஜாஹிா் உசேன் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்
மேலும் லப்பைக்குடிகாடு துணைத் தலைவா் பதவியை தோழமைக் கட்சியினா் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியுள்ளதால், திமுக தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடு வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நகராட்சி, 4 பேரூராட்சிகளிலும் திமுகவுக்கு பெரும்பான்மை இருப்பதால், தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்படவுள்ளனா்.