தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை இந்த அட்டையைபெறாத மாற்றுத்திறனாளிகள், தங்களுக்குரிய தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை (அசல் மற்றும் நகல்) பாஸ்போா்ட் அளவு புகைப்படம்- 2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாா்ச் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.