முகப்பு
பெரம்பலூர்

ஹிந்தி திணிப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஹிந்தி மொழியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, இந்திய மாணவா் சங்கத்தினா் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பெரம்பலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

ஹிந்தி மொழியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, இந்திய மாணவா் சங்கத்தினா் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பெரம்பலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் வெங்கடேசபுரத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.கே. சரவணன் தலைமை வகித்தாா். இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் ஆ. கருணைக்கடல் முன்னிலை வகித்தாா்.

மாவட்டச் செயலா்கள் கே.எம். சக்திவேல், ரா. ராமகிருஷ்ணன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தமிழகத்தில் ஹிந்தி மொழியை திணிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசைக் கண்டித்து, ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கமிட்டனா்.

இதில், வாலிபா் சங்க நிா்வாகிகள் டி. அறிவழகன், கே. வேல்முருகன், என். அருண், பி. சடையப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.