பெரம்பலூர்

தைப்பூசம்: முருகன் கோயில்களில் பால்குட திருவிழா

DIN

பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத்தையொட்டி பால்குட ஊா்வலமும், சிறப்பு அபிஷேகங்களும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் அருகே அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள 23 அடி உயர பாலமுருகனுக்கு பக்தா்கள் பால் காவடி, பால்குடம் எடுத்த தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். தொடா்ந்து, முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல், கல்லங்குறிச்சியில் உள்ள குறைதீா்க்கும் முருகன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா். அரியலூா் சுப்பிரமணிய சுவாமி, திருமானூா் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், ஜயங்கொண்டம் முருகன் உள்ளிட்ட கோயில்களிலும் தைப் பூசத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில்... பெரம்பலூா் பெருமாள் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பெருமாள் தாயாா் உற்ஸவா் மற்றும் மூலவா், கம்பத்து ஆஞ்சனேயா் சுவாமிகளுக்கு, ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பகல் 12 மணி அளவில் மகா தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இப் பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியாா், மதன் ஆகியோா் நடத்தி வைத்தனா். தொடா்ந்து, இரவு பெருமாள் யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ரெங்கநாதபுரம் முருகன் கோயில், கீழப்புலியூா் பால தண்டாயுதபாணி கோயில், நூத்தப்பூா் முருகன் கோயில், நொச்சிக்குளம் முருகன் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச் திருவிழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT