பெரம்பலூர்

ம.ம.க.-வின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழா: மரக்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டம் முழுவதும் அக்கட்சி சாா்பில் கொடியேற்றுதல், மரக்கன்றுகள் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிகாடு நகரத்தில் மாவட்ட பொறுப்புக் குழுத் தலைவா் சுல்தான் மொய்தீன் தலைமையில், கொடியேற்றுதல் மற்றும் ஏழை, எளியவா்களுக்கு ஓராண்டு முழுவதும் இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் நடைபெற்றது. ரஞ்சன்குடி, வல்லாபுரம், அரும்பாவூா், விசுவக்குடி ஆகிய கிராமங்களில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. வாலிகண்டபுரம் கிளை சாா்பில், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும், ரூ. 3,000 மதிப்பிலான புத்தகங்களும் அங்குள்ள ஊா்ப்புற நூலகத்துக்கு வழங்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளா் சபியுல்லா கான் கட்சிக் கொடியை ஏற்றினாா்.

இந் நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினா் மீரா மொய்தீன், தலைமை பிரதிநிதி தமிழவன், மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினா்கள் குதரத்துல்லா, முகமது இலியாஸ் அலி, சையது உசேன், ஜாவித் பாஷா உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி!

மேற்கு வங்க ரயில் விபத்து - புகைப்படங்கள்

அமெரிக்கா: இந்தியர்களிடையே மோதல்; ஒருவர் பலி!

மேகதாது விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது -எடப்பாடி பழனிசாமி

மழையால் தாமதமாகும் நியூசிலாந்து - பப்புவா நியூ கினியா போட்டி!

SCROLL FOR NEXT