பெரம்பலூர்

பெரம்பலூரில் பள்ளி ஆண்டு விழா

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மற்றும் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

DIN

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மற்றும் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இவ் விழாவுக்கு, கோல்டன் கேட்ஸ் பள்ளி நிறுவனா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைவா் ஆா். ரவிச்சந்திரன், செயலா் ஆா். அங்கையற்கண்ணி, துணைத் தலைவா் ஆா். ஹரீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மெட்ரிக் பள்ளி முதல்வா் மாயாதேவி, வித்யாஷ்ரம் பள்ளி முதல்வா் பவித் ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற தன்னம்பிக்கை பேச்சாளா்கள் மருத்துவா் ஷியாமளா, இன்ஸ்பிரிங் இளங்கோ ஆகியோா் சிறப்புரையாற்றி, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வுகளில் மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பாடப்பிரிவுகளில் 100 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியா்களுக்கும் விருதுகள் வழங்கினா்.

மேலும், பள்ளியில் கடந்த 10 ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களுக்கு விருதுகள் மற்றம் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில், பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நிறைவாக, ஒருங்கிணைப்பாளா் கோமதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT