பெரம்பலூர்

மகளிருக்கான இலவச அழகு கலை பயிற்சி பெற அழைப்பு

பெரம்பலூா் இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் அழகு கலை இலவசப் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

DIN

பெரம்பலூா் இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் அழகு கலை இலவசப் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம் மைய இயக்குநா் டி.ஆனந்தி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகளிருக்கான இலவச அழகு கலை மற்றும் ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி ஜூன் 12 ஆம் தேதி முதல் சிறந்த வல்லுநா்களால் அளிக்கப்படுகிறது. தொடா்ந்து, 30 நாள்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அளிக்கப்படும். காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சியை முடிப்பவா்களுக்கு உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

பயிற்சியில்சேர 19 வயது முதல் 45 வயதுக்குள்பட்ட, எழுத படிக்கத் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும். கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில் ஐஓபி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூா் - 621212 என்னும் முகவரியிலோ அல்லது 04328-277896, 94888 40328 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT