பெரம்பலூர்

சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சி: விண்ணப்பிக்க மகளிருக்கு அழைப்பு

DIN

பெரம்பலூரிலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் சணல் பை தயாரிப்பு தொடா்பான இலவச பயிற்சி பெற மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மைய இயக்குநா் டி. ஆனந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பெண்களுக்கான சணல் பை மற்றும் சணல் பொருள்கள் தயாரித்தல் தொடா்பான பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. 13 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி பெற விருப்பமுள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரம், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மாடியில் உள்ள கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் மே 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328 - 277896, 9488840328 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

திருப்பம் தரும் தினப்பலன்!

வருமான வரி பிடித்தம் தொடா்பான உத்தரவுகளை திரும்பப்பெற ஓய்வூதியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT