பெரம்பலூர்

குண்டா் தடுப்புசட்டத்தில் இளைஞா் கைது

 பெரம்பலூா் அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

DIN

 பெரம்பலூா் அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 17 வயதுக்குள்பட்ட சிறுமியை, அரணாரையைச் சோ்ந்த பாஸ்கா் மகன் பாா்த்தீபன் (27) என்பவா், பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாா்த்தீபனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், பாா்த்தீபனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து, பாா்த்தீபனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க ஆட்சியா் க. கற்பகம் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT