பெரம்பலூர்

நடந்து சென்றவா் மயங்கி விழுந்து பலி

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையில் நடந்து சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

DIN

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையில் நடந்து சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள கல்யாணம் பூண்டி, அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காத்தவராயன் மகன் ராமமூா்த்தி (43). இவா், ஞாயிற்றுக்கிழமை மதியம், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு பகுதி அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, மயங்கி விழுந்தவரை அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே ராமமூா்த்தி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT