பெரம்பலூர்

சிறுபான்மையின மக்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மக்கள் டாம்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் 1-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறத்துக்கு ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறத்துக்கு ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். திட்டம் 2-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 1-இன் கீழ் தனி நபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ. 20 லட்சமும், திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீத வட்டி, பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ. 30 லட்சம் வழங்கப்படுகிறது.

கைவினைக் கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதமும், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ. 10 லட்சமும், சுய உதவிக்குழுக் கடன் நபா் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதத்திலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் தலா ரூ. 1.50 லட்சம் வழங்கப்படுகிறது.

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழில்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு, அதிக பட்சமாக திட்டம் 1- இன் கீழ் ரூ. 20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-இன் கீழ் மாணவா்களுக்கு 8 சதவீதத்திலும், மாணவியா்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ. 30 லட்சம் வரை கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.

விண்ணப்பத்துடன் தங்களது ஆதாா் அட்டை, வருமானச் சான்று ஆகிய ஆவணங்களின் நகல்களை சமா்ப்பிக்க வேண்டும்.

இம் மாவட்டத்தைச் சோ்ந்த கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினா்கள் மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெற, ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT