பெரம்பலூர்

பெரம்பலூா் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

DIN

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் குறைதீா் கூட்ட அரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அளித்து, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 19 பேருக்கு ரூ. 1.21 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளும் 9 மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு தொடங்கி ரூ. 1.62 லட்சம் மதிப்பில் திருமண நிதி வரவு வைத்த கணக்குப் புத்தகங்களையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 279 மனுக்கள் பெறப்பட்டது. இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'எலெக்சன்’ வெற்றியா? - திரைவிமர்சனம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

பந்துவீச்சாளர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

SCROLL FOR NEXT