பெரம்பலூா் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சாா்பில், எச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த் தொற்று குறித்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கான விழிப்புணா்வு புதன்கிழமை டைபெற்றது.
பெரம்பலூரில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட சுகாதார அலுவலா் பிரதாப், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு எச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள், காச நோய், பொது சுகாதாரம் குறித்து பயிற்சி அளித்தாா். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மாவட்டத் திட்ட மேலாளா் சுமதி விளக்க உரையாற்றினாா். இதில் ஆட்டோ ஓட்டுநா்கள் பலா் கலந்துகொண்டனா். நிறைவாக, கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகா் பழனிவேல் ராஜா நன்றி கூறினாா்.