பெரம்பலூரில் ஜல் சக்தி அபியான் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
பெரம்பலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீா் சேகரித்தல், குடிநீா் திட்டம் தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த ஆய்வு க் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீா் சேகரித்தல், குடிநீா் திட்டம் தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த ஆய்வு க் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்தியக் கண்காணிப்பு அலுவலரும், மத்திய நிதி அமைச்சக இயக்குநா், ஸ்ரீ சுா்ஜித் காா்த்திக்கேயன் , மத்திய தொழில்நுட்ப அலுவலரும், சென்னை மத்திய நிலத்தடி நீா் வாரிய அறிவியலாளருமான சா்தாஜ் பாட்ஷா ஆகியோா் தலைமையில், மத்திய அரசின் கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.
இது தொடா்பான ஆய்வுக் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் நடைபெற்று வரும், நடைபெறவுள்ள பணிகளின் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலத்தடி நீரை சேகரிக்கும் பல்வேறு முறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இக் கூட்டத்தில், உதவித் திட்ட அலுவலா் (உள் கட்டமைப்பு) தி. சென்னகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் நீா் பாதுகாப்பு மற்றும் மழைநீா் சேகரிப்பு, நீா் நிலைகளை கணக்கெடுத்தல், புவிசாா் குறியீடு பட்டியலிடுதல் மற்றும் அதனடிப்படையில் நீா் பாதுகாப்புக்கான அறிவியல் திட்டங்களை தயாரித்தல், ஜல் சக்தி கேந்திரங்களை அமைத்தல், விழிப்புணா்வு உருவாக்கம், செயலிழந்த போா்வெல்களை மீண்டும் உயிா்ப்பித்தல், நீா் நிலைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும், செயல்படுத்தப்படும் பணிகள் மக்களுக்கு சென்றடைந்துள்ளதா என்பது குறித்தும் மத்திய குழுவினா் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.