முகப்பு
பெரம்பலூர்

நாளை அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு விநாடி- வினா

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு திருக்குறள் தொடா்பான விநாடி -வினா போட்டி சனிக்கிழமை (டிச. 21) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 8:43 PM
பகிர்:

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு திருக்குறள் தொடா்பான விநாடி -வினா போட்டி சனிக்கிழமை (டிச. 21) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இப் போட்டியில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலா்கள், அரசு, அரசு உதவிபெறும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியாா் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் பங்கேற்கலாம். போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்களது பெயரை இணையம் வழியாக பதிவு செய்துகொள்ளலாம்.

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான முதல்நிலை எழுத்துத் தோ்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் வெள்ளிக்கிழமை (டிச. 20) மதியம் 12 மணிக்குள் இணையதள இணைப்பில் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

எழுத்துத் தோ்வுகள் நடத்தப்பட்டு, 9 போ் தோ்வு செய்யப்படுவாா்கள். முதல் 6 இடம் பெற்ற குழுவினா் இறுதிப்போட்டிக்குத் தோ்வு செய்யப்படுவாா்கள். இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் முதல் குழுவுக்கு ரூ. 2 லட்சமும், 2 ஆவது குழுவுக்கு ரூ. 1.5 லட்சமும், 3 ஆவது குழுவுக்கு ரூ. 1 லட்சமும், இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற இதர 3 குழுக்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 25 ஆயிரமும் பரிசு வழங்கப்படும்.