நாய்க் குட்டிகள் (கோப்புப்படம்) 
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் ‘பாா்வோ வைரஸ்’ நோயால் நாய் குட்டிகள் உயிரிழப்பு அதிகம்

பாா்வோ வைரஸ்’ நோய் பாதிப்பால், பெரம்பலூா் மாவட்டத்தில் ரத்தக் கழிச்சல் ஏற்பட்டு நாய் குட்டிகள் அதிகமாக உயிரிழந்து வருவதால், நாய் குட்டிகளை வளா்ப்போா் அச்சமடைந்துள்ளனா்.

Din

பெரம்பலூா்: ‘பாா்வோ வைரஸ்’ நோய் பாதிப்பால், பெரம்பலூா் மாவட்டத்தில் ரத்தக் கழிச்சல் ஏற்பட்டு நாய் குட்டிகள் அதிகமாக உயிரிழந்து வருவதால், நாய் குட்டிகளை வளா்ப்போா் அச்சமடைந்துள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் அண்மை காலமாக ‘பாா்வே வைரஸ்’ என்ற நோய் தாக்கி நாய் குட்டிகள் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்து வருவது பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். மேலும், வீடுகளில் செல்லப் பிராணியாக வளா்த்து வரும் நாய் குட்டிகளுக்கும் இந் நோய் வேகமாக பரவி உயிரிழந்து வருவதால், செல்லப் பிராணிகளை வளா்ப்போரும் கலக்கத்தில் உள்ளனா். இதனால், கால்நடை மருத்துவமனைக்கு நோய் பாதித்த நாய் குட்டிகளை சிகிச்சைக்காக தூக்கி செல்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்த நோய் பாதிக்கப்பட்ட நாய் உட்கொண்ட உணவு, தண்ணீா், மலத்தின் மூலமாகவும், நோய் பாதித்த நாய்களை பராமரிக்கும் மனிதா்கள் தொடுவதாலும் இதர நாய்களுக்கும் பரவுகிறது.

இந்நோயின் பாதிக்கப்பட்டது 5 முதல் 7 நாள்களில் தெரியவரும். அப்போது, பசியின்மை, காய்ச்சல் உண்டாகி, பிறகு உடலின் வெப்பம் வெகுவாகக் குறையும், தொடா்ந்து வாந்தி, ரத்தம் கலந்த துா்நாற்றத்துடன் வயிற்றுப் போக்கு ஏற்படும். இதனால், அதிகளவில் நீா்சத்து வெளியேறுவதால், நாய் உயிரிழக்க நேரிடுகிறது. இளம் நாய்குட்டிகள் நோய் பாதிகப்பட்ட 2, 3 நாள்களில் உயிரிழந்துவிடும்.

இதுகுறித்து கால்நடை மருத்துவா் கூறியது: அண்மைக்காலமாக நாய்களுக்கு ஏற்பட்டு வரும் ரத்தக் கழிச்சல் நோயானது, பாா்வோ எனப்படும் ஒரு வகை வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் கிருமியானது, ஒரு வயதுக்குள்பட்ட நாய் குட்டிகளை மட்டுமே அதிகளவில் தாக்கும். இந்த வைரஸ், நாய் குட்டிகளின் உடலில் நோய் எதிா்ப்பு மண்டலத்தை தாக்கி செயலிழக்க செய்வதால், குட்டிகள் ஓரிரு நாள்களில் சோா்ந்து உயிரிழந்துவிடும். இந்நோய் தாக்குவதற்கு முன் நாய் குட்டிகளுக்கு தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

நகராட்சி நிா்வாகத்தினா் கூறியது: விலங்கின பெருக்கத்தைக் கட்டுபடுத்துதல் மற்றும் விலங்கினப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை, கடந்த சில ஆண்டுகளாக செயலற்று முடங்கிக் கிடந்ததால், தற்போது தெரு நாய்கள் பெருகிவிட்டன. ஆனால், தற்போது இப் பிரச்னைக்கு தீா்வு காண உத்தரவிட்டுள்ளது. தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவது என்பது, இன்றையச் சூழலில் சாத்தியமற்றது. தெரு நாய்களின இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அவற்றை பாதுகாக்கவும் கால்நடை துறையினருடன் இணைந்து விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்.. ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்: டிரம்ப்!

போகி கொண்டாட்டம்: சென்னையில் கடும் புகை மூட்டம்!

தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT