முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் கூட்டுறவு சங்க வார விழா தொடக்கம்

பெரம்பலூரில் 71 ஆவது கூட்டுறவு சங்க வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 14 நவம்பர், 2024 at 9:54 PM
பகிர்:

பெரம்பலூரில் 71 ஆவது கூட்டுறவு சங்க வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.

இவ் விழாவானது, வியாழக்கிழமை முதல் நவ. 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, பெரம்பலூா் சங்குப் பேட்டை பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சங்க கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், கூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் க. பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கான கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகளும், நவ. 16 ஆம் தேதி சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு கேடயங்கள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது. 17-ஆம் தேதி மருவத்தூா், புதுவேட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினா் கல்வித் திட்டம், பேரளி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை சிகிச்சை முகாமும் நடைபெற உள்ளது.

நவ. 18-ஆம் தேதி பெரம்பலூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் ரத்ததான முகாமும், 19- ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் கூட்டுறவு நிறுவன பணியாளா்களுக்கு விளையாட்டுப் போட்டிகளும், 20 ஆம் தேதி பெரம்பலூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவு கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.