முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே பனை விதைகள் நடுதல்: நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா

பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி கிராமத்தில், இந்தியன் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் பனை விதைகள் நடுதல் மற்றும் ஊராட்சி பணியாளா் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 11:15 PM
பொம்மனப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் ஊராட்சி பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சாா்- ஆட்சியா் சு. கோகுல். உடன், மாவட்டத் தலைவா் தங்கராசு, துணைத் தலைவா் என். ஜெயராமன், கௌரவச் செயலா் வி. ராதாகிருஷ்ணன்.
பகிர்:

பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி கிராமத்தில், இந்தியன் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் பனை விதைகள் நடுதல் மற்றும் ஊராட்சி பணியாளா் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தங்கராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நா. ஜெயராமன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சாா்- ஆட்சியா் சு. கோகுல், ஊராட்சி பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, 1,000 பனை விதைகள் நடும் பணியை தொடக்கி வைத்தாா்.

இதில், செஞ்சிலுவை சங்க மாவட்ட கௌரவச் செயலா் வி. ராதாகிருஷ்ணன், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ரஞ்சித்குமாா், பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ராமன், உதவித் திட்ட அலுவலா் தேவேந்திரன், மாவட்ட தோட்டக் கலைத் துறை அலுவலா் மகேஸ்வரி, செயற்குழு உறுப்பினா்கள் கோசிபா, ராமராஜ், துரை, ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, அமைப்பின் செயற்குழு உறுப்பினா் ராஜா வரவேற்றாா். நிறைவாக, பொருளாளா் ஜோதிவேல் நன்றி கூறினாா்.