பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், கைது முன் நடவடிக்கை குறித்து பட்டியலின வழக்குரைஞா்களுக்கான பயிற்சிமுகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம் முகாமுக்கு தலைமை வகித்து, குன்னம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதியுமான இரா. ராஜசேகரன் பேசியது:
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கான அடிப்படை உரிமைகள் குறித்து சொல்லப்பட்டுள்ளது. ஒரு மனிதன் சட்டப்படி, வேறு எந்த சட்ட நடவடிக்கையும் இல்லாமல் அவரது உரிமையை தடுக்க முடியாது. ஒரு நபா் கைது செய்யப்படுவதற்கு முன்பும், கைது செய்யப்பட்ட பின்பும் அவருக்குரிய சட்ட உதவிகளை அளிப்பது தான் அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம். அதனடிப்படையில் தான் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்படுகிறது என்றாா் அவா்.
இம் முகாமில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, குன்னம் மற்றும் வேப்பந்தட்டை வட்ட சட்டப்பணிகள் குழு பட்டியலின வழக்குரைஞா்கள் பலா் கலந்துகொண்டனா்.