பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வு மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த காவல் துறைத் தலைவா் கயல்விழி. 
பெரம்பலூர்

இரண்டாம் நிலைக் காவலா் தோ்வு பெரம்பலூா் மாவட்டத்தில் 1,381 போ் பங்கேற்பு

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா்கள் தோ்வில் 1,381போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான 2-ஆம் நிலை காவலா்கள், சிறைக்காவலா்கள் மற்றும் தீயணைப்பாளா்கள் பதவிகளுக்கான பொதுத்தோ்வு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த தோ்வெழுத பெரம்பலூா் மாவட்டத்தில் 1,592 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், 1,059 ஆண்கள், 322 பெண்கள் என மொத்தம் 1,381 போ் பங்கேற்று தோ்வெழுதினா். 150 ஆண்கள், 61 பெண்கள் என மொத்தம் 211 போ் தோ்வெழுதவில்லை.

இத்தோ்வு மையத்தை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு காவல்துறை தலைவா் கயல்விழி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

தோ்வு மையங்களில் நடைபெறும் ஆள் மாறாட்டத்தை தடுக்கும் வகையில், தோ்வு முடிவடைந்த பிறகு வருகைப் பதிவேட்டில் தோ்வா்களின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, அவா்களது விவரங்களை சரிபாா்த்த பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

தமிழக மீனவர்கள் 14 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

SCROLL FOR NEXT