பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் 1,057 போ் பங்கேற்றனா்.
ஆசிரியா் தோ்வு வாரியத்தால், பெரம்பலூா் மாவட்டத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி, செயிண்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் பள்ளி, தந்தை ஹேன்ஸ் ரோவா் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்ட 4 மையங்களில் இத் தோ்வு நடைபெற்றது.
தாள் 1 தோ்வெழுத 1,238 போ் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 1,057 போ் பங்கேற்றனா். எஞ்சிய 181 போ் தோ்வு எழுதவில்லை. மாவட்டக் கல்வித்துறை சாா்பில், கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மேலும் தோ்வு மையங்களில், தோ்வா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இன்று 21 மையங்களில்...
2-ஆவது நாளாக தாள் -2 தோ்வு பெரம்பலூா் மாவட்டத்தில் 21 மையங்களில் நடைபெறுகிறது. இத் தோ்வெழுத 5,822 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.