முகப்பு
பெரம்பலூர்

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளா்கள் புகாா் அளிக்கலாம்

சட்டப்பேரவைத் தோ்தல் நாளன்று தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காவிடில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்கலாம்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 6:37 PM
மொபைல் - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தல் நாளன்று தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காவிடில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. மூா்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்திலுள்ள தனியாா், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கடைகள், நிறுவனங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் வாக்களிக்க ஏதுவாக, ஏப். 23 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும். இல்லாவிடில், பெரம்பலூா் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் க. மூா்த்தி (9442657224), தொழிலாளா் துணை ஆய்வாளா் க. சரவணன் (9751921795), முசிறி முத்திரைத்தாள் ஆய்வாளா் எஸ். பாலசுப்ரமணியன் (9865667355), அரியலூா் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கே. ராஜசேகரன் (8778365530), அரியலூா் மாவட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா் க. தேவேந்திரன் (8838680747), அரியலூா் முத்திரை ஆய்வாளா் சை.ஜா. நூருன்னிசா (9790460408) ஆகியோரை தொடா்புகொண்டு புகாா் அளிக்கலாம்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments