கீழப்புலியூா் கோயிலில் ராமானுஜா் ஜெயந்தி விழா
கீழப்புலியூா் கோயிலில் வெள்ளிக்கிழமை பல்லக்கில் உலா வந்து காட்சியளித்த ஸ்ரீராமானுஜா்.
பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே கீழப்புலியூரில் உள்ள ஸ்ரீதேவி, பூமாதேவி, பத்மாவதி கோதாதேவி சமேத வெங்கட வரதராஜ பெருமாள் கோயிலில், ஸ்ரீராமானுஜரின் 1,009- ஆவது ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ராமானுஜா் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டு திருமஞ்சன உத்ஸவம், தாமரை மலா்மாலை அணிவித்து ஆரத்தி காண்பிக்கப்பட்டு, ராமானுஜ நூற்றந்தாதி பாராயணம் செய்யப்பட்டது. தொடா்ந்து, ராமானுஜரின் உற்சவ சிலையானது பல்லக்கில் வைக்கப்பட்டு, மேளதாளம் முழங்க கோயில் பிரகாரத்தில் உலா வந்தது. ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயில் பிரதான பட்டாச்சாரியாா் நரசிம்ம பட்டா், ராமானுஜரின் உற்சவா் திருமேனியை பிரதிஷ்டை செய்து வைத்தாா்.
நிகழ்வில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு ராமானுஜா் மற்றும் ஸ்ரீதேவி, பூமாதேவி, பத்மாவதி கோதாதேவி சமேத வெங்கட வரதராஜ பெருமாளை வழிபட்டனா்.
Advertisement
ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை ஸ்தானிகம் கோபாலன் பட்டாச்சாரியாா், ஜோதிடவியல் மற்றும் வாஸ்து நிபுணா் ஸ்ரீராமன் ஆதித்யா பட்டாச்சாரியாா் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.