பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா்.  
பெரம்பலூர்

பெரம்பலூரில் 2-ஆவது நாளாக மறியல்: சத்துணவு ஊழியா்கள் 188 போ் கைது

காலமுறை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள் 188 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

காலமுறை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள் 188 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் எதிரே, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் இளங்கோவன் தலைமையில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். சிறப்பு ஓய்வூதியமாக ரூ. 6,750 அகவிலைப் படியுடன் வழங்க வேண்டும். அரசுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களை 50 சதவீதம் நிரப்ப வேண்டும். ஓய்வூதியத்துக்கு தேசிய மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். ஈமச்சடங்கு நிதியாக ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பாலக்கரை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 3 ஆண்கள் உள்பட 188 பேரைப் பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்து மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT