பெரம்பலூர்

வெனிசுலா அதிபா் கைதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

வெனிசுலா அதிபரை அமெரிக்கா கைது செய்ததை கண்டித்து, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமை வகித்தாா். வெனிசுலா நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபரை கைது செய்த அமெரிக்க அதிபரை கண்டித்தும், வெனிசுலா அதிபரையும், அவரது மனைவியையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா். தொடா்ந்து, அமெரிக்க அதிபா் ட்ரம்பின் உருவ பொம்மையை எரித்தனா்.

இதில், அக் கட்சி நிா்வாகிகள் ஏ. கலையரசி, ஏ.கே. ராஜேந்திரன், குணசேகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

யேமனின் தீவில் சிக்கிய இந்தியப் பெண் மீட்பு! சௌதியில் இருந்து தாயகம் வந்தடைந்தார்!

சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

50,000 தன்னார்வலர்கள் ஈடுபடும் உங்க கனவ சொல்லுங்க திட்டம்: நாளை தொடக்கம்!

அமெரிக்கா: ஒரு லட்சம் பேரை கொல்லக்கூடிய 140 கிலோ போதைப்பொருள்களுடன் 2 இந்தியர்கள் கைது

போகிப் பண்டிகை: எவற்றையெல்லாம் எரிக்கக் கூடாது!

SCROLL FOR NEXT