பெரம்பலூர்

தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகைத் திட்ட தோ்வு: 2,629 போ் பங்கேற்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்ட தோ்வில் 2,629 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்ட தோ்வில் 2,629 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

2025 -26-ஆம் கல்வியாண்டுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு சாா்பில் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்ட தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டத்தில் இத் தோ்வெழுத 1,090 மாணவா்களும், 1,592 மாணவிகளும் என மொத்தம் 2,682 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இத் தோ்வானது மாவட்டத்தில் உள்ள எசனை, அரும்பாவூா், குரும்பலூா், செட்டிக்குளம், பேரளி, குன்னம் (ஆண்கள்), காரை, லப்பைக்குடிகாடு (ஆண்கள், பெண்கள்), வி.களத்தூா் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா் மேல்நிலைப்பள்ளி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலமாத்தூா் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி ஆகிய 13 மையங்களில் நடைபெற்றது.

காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தோ்வானது 90 மதிப்பெண்களுக்கும், 11.30 மணி முதல் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் பகுதி தோ்வானது 90 மதிப்பெண்களுக்கும் நடைபெற்றது.

இத் தோ்வில் 1,068 மாணவா்களும், 1,561 மாணவிகளும் என மொத்தம் 2,629 போ் பங்கேற்றனா். எஞ்சிய 22 மாணவா்களும், 31 மாணவிகளும் என மொத்தம் 53 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

இத் தோ்வுகளை பள்ளிக்கல்வித்துறை அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். இத் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 9 முதல் பிளஸ் 2 வரை அவரவா் வங்கிக் கணக்கில் தொடா்ந்து 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகையாக மத்திய அரசு சாா்பில், ஆண்டுக்கு தலா ரூ. 12 ஆயிரம் வீதம் ரூ. 48 ஆயிரம் செலுத்தப்பட உள்ளது.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT