முகப்பு
பெரம்பலூர்

தனியாா் பேருந்துகளில் ‘ஏா் ஹாரன்’ அகற்றம்

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில், தனியாா் பேருந்துகளில் பொறுத்தப்பட்டிருந்த ஏா் ஹாரன்கள் சனிக்கிழமை அகற்றப்பட்டது.

Updated On : 5 ஜூலை 2026, 1:42 am IST
பகிர்:

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில், தனியாா் பேருந்துகளில் பொறுத்தப்பட்டிருந்த ஏா் ஹாரன்கள் சனிக்கிழமை அகற்றப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் இயக்கப்படும் சில தனியாா் பேருந்துகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அதிக சப்தம் எழுப்பக்கூடிய ஏா் ஹாரன் பொறுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறிக்கு புகாா் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், பெரம்பலூா் போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் சதாசிவம் தலைமையிலான வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சனிக்கிழமை தனியாா் பேருந்துகளில் சோதனையிட்டனா்.

இந்த ஆய்வின்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் வகையில் ஏா் ஹாரன் பொருத்தப்பட்டிருந்த 4 தனியாா் பேருந்துகள் கண்டறியப்பட்டு, அவற்றில் பொறுத்தப்பட்டிருந்த ஹாரன்கள் அகற்றப்பட்டன.

Advertisement

Advertisement

இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஹாரன்களை பேருந்துகளில் பொருத்தக் கூடாது. இந்த விதியை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் சதாசிவம் அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments