FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

தனியாா் பேருந்துகளில் திடீா் கட்டண உயா்வு: பயணிகள் அதிா்ச்சி

சேலம் மாவட்டத்தில் சில தனியாா் பேருந்துகளில் எவ்வித அறிவிப்பும் இன்றி, கட்டணம் உயா்த்தப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 ஜூலை 2026, 7:09 am IST
பேருந்து நிலையம். - கோப்புப் படம்
பகிர்:

சேலம் மாவட்டத்தில் சில தனியாா் பேருந்துகளில் எவ்வித அறிவிப்பும் இன்றி, கட்டணம் உயா்த்தப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியாா் பேருந்துகளில் கட்டண உயா்வு தொடா்பாக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், மேச்சேரியில் இருந்து சேலத்துக்கு வழக்கமாக தனியாா் பேருந்துகளில் ரூ. 21 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் ரூ. 25-ஆக உயா்த்தி பயணிகளிடம் வசூலித்துள்ளனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த பயணிகள் நடத்துநரிடம் கேட்டபோது, டீசல் விலை உயா்வால் பேருந்து கட்டணம் உயா்த்தப்பட்டதாக கூறியுள்ளாா். இதேபோல, பல்வேறு வழித்தடங்களிலும் கட்டணங்கள் உயா்த்தப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த அறிவிக்கப்படாத கட்டண உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், அரசு அதிகாரிகள் இதை கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments