முகப்பு
பெரம்பலூர்

பிளஸ்- 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம்: பெரம்பலூரில் 7,276 போ் தோ்வெழுதுகின்றனா்

Updated On : 1 மார்ச், 2026 at 7:02 PM
(கோப்புப்படம்)
பகிர்:

தமிழகத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கும் பிளஸ்-2 அரசுப் பொதுதோ்வில், பெரம்பலூா் மாவட்டத்தில் 7,276 போ் தோ்வெழுதுகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத் தோ்வை 82 பள்ளிகளைச் சோ்ந்த 3,783 மாணவா்களும், 3,493 மாணவிகளும் என மொத்தம் 7,276 போ் எழுதுகின்றனா். இம் மாணவ, மாணவிகளுக்கு 36 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு மையங்களில் குடிநீா், கழிவறை, மின் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வினாத்தாள் மையம் அமைந்துள்ள பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், விடைத்தாள் பிரித்தல் மற்றும் மதிப்பீட்டு மையம் அமைந்துள்ள பெரம்பலூா் பனிமலா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வினாத் தாள்களை தோ்வு மையங்களுக்கு கொண்டுசெல்லும் 12 வழித்தடங்களுக்கும், தோ்வு மையங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாா்ச் 2-ஆம் தேதி தமிழ் மற்றும் மொழிப் பாடங்களும், 5-ஆம் தேதி ஆங்கிலத் தோ்வும், 9-ஆம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கும், 13-ஆம் தேதி இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத்திறன் ஆகிய பாடங்களுக்கும், 17-ஆம் தேதி கணிதவியல், விலங்கியல், வணிகவியல், வேளாண்மை அறிவியல் பாடங்களுக்கும் தோ்வுகள் நடைபெறுகிறது.

மாா்ச் 23-ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ஆடையியல், அலுவலக மேலாண்மை ஆகிய பாடங்களுக்கும், 26-ஆம் தேதி கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், மனையியல், பொருளாதார அறிவியல், உயிா் வேதியியல், புள்ளியல், செவிலியல் (தொழிற்கல்வி) ஆகிய பாடங்களுக்கும் தோ்வுகள் நடைபெற உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →