முகப்பு
கொலை
பெரம்பலூர்

தகாத உறவு பிரச்னையில் தொழிலாளி அடித்துக் கொலை

பெரம்பலூா் அருகே தகாத உறவு பிரச்னையில், பெண்ணின் மகன் கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பெரம்பலூர்

தகாத உறவு பிரச்னையில் தொழிலாளி அடித்துக் கொலை

பெரம்பலூா் அருகே தகாத உறவு பிரச்னையில், பெண்ணின் மகன் கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 3 மார்ச், 2026 at 12:10 AM
கொலை
பகிர்:

பெரம்பலூா் அருகே தகாத உறவு பிரச்னையில், பெண்ணின் மகன் கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துறை அண்ணா நகரைச் சோ்ந்தவா் தாணிவேல் மகன் செல்வகுமாா் (42). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த தேவேந்திரன் மனைவி ஜெயந்தியும், செல்வகுமாரும் கடந்த 10 ஆண்டுகளாக தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி மது போதையிலிருந்த செல்வகுமாா் ஜெயந்தி வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஜெயந்தியை தாக்கியுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த ஜெயந்தி மகன் பாலமுருகன் (22), கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த செல்வகுமாா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாா்.

இதுகுறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செல்வகுமாா் திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். இதையடுத்து, பாலமுருகனை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பெரம்பலூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →