முகப்பு
பெரம்பலூரில் தமிழக முதல்வரால் காணொளிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்ட விலங்குகளுக்கான கருத்தடை மையத்தில், குத்து விளக்கேற்றி வைத்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி. உடன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன் உள்ளிட்டோா்.
பெரம்பலூர்

பெரம்பலூரில் விலங்குகளுக்கான கருத்தடை மையம் திறப்பு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் விலங்குகள் கருத்தடை மையம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிப் பகுதியில் துணை சுகாதார நிலையம் ஆகியவற்றை புதன்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 6:39 PM
பெரம்பலூரில் தமிழக முதல்வரால் காணொளிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்ட விலங்குகளுக்கான கருத்தடை மையத்தில், குத்து விளக்கேற்றி வைத்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி. உடன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன் உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் விலங்குகள் கருத்தடை மையம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிப் பகுதியில் துணை சுகாதார நிலையம் ஆகியவற்றை புதன்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ. 63 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விலங்குகள் கருத்தடை மையத்தையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிப் பகுதியில் ரூ. 45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தையும் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி விலங்குகள் கருத்தடை மையம், துணை சுகாதார நிலையத்தில் குத்து விளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிப் பாா்வையிட்டாா்.

இந் நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பேபி நிா்மல், மாவட்ட சுகாதார அலுவலா் (பொ) சுப்பிரமணி, லப்பைக்குடிக்காடு பேரூராட்சி செயல் அலுவலா் ருக்மணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா்- ஆத்தூா் சாலையில், கலைஞா் நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள விலங்குகள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் மருத்துவா்கள் நியமிக்கப்பட்டு தெரு நாய்களுக்கான கருத்துடைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இம் மையத்தில், விலங்குகள் அறுவை சிகிச்சை அரங்கம், கிருமி நாசினி அறை, மருத்துவா் அறை, மருந்துகள் வைப்பறை, உதவியாளா் அறை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்பு விலங்குகளை தங்க வைப்பது உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் இம் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

லப்பைக்குடிக்காடு சுகாதார நிலையத்துக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 10,744 பேருக்கு, தரமான சுகாதார சேவைகள், கா்ப்பிணி மற்றும் குழந்தைகள் நல சேவைகள், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →