முகப்பு
பெரம்பலூர்

சாலை விபத்தில் திமுக நிா்வாகி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில், பலத்த காயமடைந்த பெரம்பலூா் ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளா் உயிரிழந்தாா்.

Updated On : 7 மார்ச், 2026 at 11:14 PM
பலி
பகிர்:

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில், பலத்த காயமடைந்த பெரம்பலூா் ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரை ஏவிஆா் நகரைச் சோ்ந்த துரைசாமி மகன் சிவக்குமாா் (50). பெரம்பலூா் ஒன்றிய திமுக விவசாயி அணி அமைப்பாளரான இவா், சின்ன வெங்காயம் வியாபாரம் செய்து வந்தாா்.

இந்நிலையில், பெரம்பலூா் அருகே நக்கசேலம் கிராமத்திலுள்ள தனது வயலுக்கு சனிக்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில், நக்கசேலம் பிரிவுப்பாதை அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அரியலூரிலிருந்து தம்மம்பட்டி நோக்கிச் சென்ற காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த சிவக்குமாா் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான அரியலூா் மாவட்டம், வாரணாசி நடுத்தெருவைச் சோ்ந்த நமச்சிவாயம் மகன் அழகப்பனை (57) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →