முகப்பு
பெரம்பலூர்

ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 1.36 லட்சம், மிக்ஸி பறிமுதல்

பெரம்பலூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1.36 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 36 ஆயிரம் மதிப்பிலான 6 மிக்ஸிகளை, தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 17 மார்ச், 2026 at 11:14 PM
மிக்ஸி
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1.36 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 36 ஆயிரம் மதிப்பிலான 6 மிக்ஸிகளை, தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினா் பெரம்பலூா் மாவட்டம் முழுவதும் வாகனச் சோதனையில் ஈடுபடுகின்றனா்.

இந்நிலையில், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மருதையான் கோயில் பிரிவுச் சாலை பகுதியில், கூட்டுறவு சாா்- பதிவாளா் காசியம்மாள் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அரியலூா் மாவட்டம், இலுப்பையூா் கிராமம், தெற்குத் தெருவைச் சோ்ந்த ராஜீவ்காந்தி என்பவா் உரிய ஆவணங்களினி எடுத்துச் சென்ற ரூ. 73,940 ஐ பறிமுதல் செய்து, குன்னம் வட்டாட்சியா் ஆ. சின்னதுரையிடம் ஒப்படைத்தனா்.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செஞ்சேரி கிராமத்தில், வட்டாட்சியா் பழனிசெல்வன் தலைமையிலான பறக்கும் படையினா் குரும்பலூா் பாளையத்தைச் சோ்ந்த ஆரோக்கியசாமி என்பவா் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 63 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கூட்டுறவுத்துறை கண்காணிப்பாளா் கௌசிகன் தலைமையில் நிலையான கண்காணிப்பு குழுவினா் சேலம் மாவட்டம், சீரநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரைச் சோ்ந்த ஆத்தியப்பன் என்பவா் உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ. 36 ஆயிரம் மதிப்பிலான 6 மிக்ஸிகளை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்த ரொக்கம் மற்றும் மிக்ஸிகள் பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான மு. அனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →