புதுக்கோட்டை

மேசைப்பந்துப் போட்டி: மறமடக்கி அரசுப்பள்ளி முதலிடம்

அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

தினமணி

அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் அண்மையில் ஆலங்குடி வட்டம் வேங்கடகுளம் தூயவளனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், பல்வேறு அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில்,  19-வயதுகுள்பட்ட மாணவர்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர்களுக்கான மேசைப்பந்து போட்டியில் மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடமும் பெற்றனர். 17-வயதுக்குட்பட்டோருக்கான மாணவியருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர்  பிரிவிலும் மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது.

மணமேல்குடியில்  அண்மையில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் கலந்து கொண்டு முதல்பரிசு பெற்ற மறமடக்கி பள்ளி மாணவிகள் திருச்சியில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், ஆசிரியர்கள் பாலன், கங்கைஅரசன், தங்கமணி, ஜெயக்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலையரசி, வெண்முகில் உமா உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிக்கட்டத்தில் 29 படப்பிடிப்பு!

போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!

விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!

நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!

தில்லி காற்று மாசு: அரசு, தனியார் அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவு!

SCROLL FOR NEXT