புதுக்கோட்டை

'புகையிலை, ஆரோக்கியமற்ற உணவு இருதய நோய்க்கு காரணம்'

DIN

புகையிலை, ஆரோக்கியமற்ற உணவு, உடல் மந்தம் ஆகியவை இருதய நோய்க்கு காரணிகளாக திகழ்கின்றன என்றார் இருதய நோய் நிபுணர் வெங்கடேசன்.

புதுக்கோட்டையில் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், டீம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து வியாழக்கிழமை சங்கத் தலைவர் எம். கருப்பையா தலைமையில் நடத்திய உலக இருதய தினக் கருத்தரங்கில் அவர் பேசியது:

புகையிலை, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் மந்தம் போன்றவற்றால் இருதய நோய் உண்டாகிறது. உலக சுகாதார நிறுவனம் இருதய நோய், பக்கவாதம் போன்ற நோய்களில் இருந்து அகால மரணங்களை குறைந்தபட்சம் 80 சதவிகிதம் தவிர்க்க முடியும் எனக் கூறுகிறது.

உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள், ரத்த அழுத்த கட்டுப்பாட்டை மேம்படுத்தி, அதனுடன் தொடர்புடைய உடல்நல சிக்கல்களின் அபாயத்தை குறைக்க முடியும். எனினும், வாழ்க்கை முறை மாற்றங்கள் திறனற்றதாக அல்லது போதுமானதாக இல்லாதவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் அவசியம்.

உயர் ரத்த அழுத்தம் இருந்தும் அதை உணராத மக்களின் எண்ணிக்கை, கணிசமானது. ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கான நடவடிக்கைகளுக்குத் தேவைப்படுவது, உயர் ரத்த அழுத்தத்தின் பின்விளைவுகளை குறைப்பதும் மற்றும் உயர் ரத்த அழுத்த எதிர்ப்பிகள்  மருந்து சிகிச்சை முறையை இயன்ற அளவு குறைப்பதும் ஆகும்.

மருந்து சிகிச்சை முறைகளை தொடங்குவதற்கு முன், குறைந்த ரத்த அழுத்தத்திற்கு வாழ்க்கை முறை மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

சுறுசுறுப்பான நடைபயிற்சி போன்ற வழக்கமான உடல்ரீதியான ஏரோபிக் நடவடிக்கையில் ஈடுபடுதல். பழங்கள், காய்கறிகள் நிறைந்த ஒரு உணவுக் கட்டுப்பாட்டை உட்கொள்ளுதல் மூலம் நல்ல முடிவுகளை அடைய முடியும் என்றார்.

மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் கே.எச். சலீம், தலைமைச் செயல் இயக்குநர் பி. தனசேகரன், நிர்வாகி  கே.ஆர். ராமநாதன் ஆகியோர் மாணவிகளுக்கு இருதய நோய் விழிப்புணர்வு கையேட்டை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT