புதுக்கோட்டை

நரிக்குறவர் காலனியில் மருத்துவ முகாம்: 150 பேருக்கு சிகிச்சை

DIN

புதுக்கோட்டை அருகே உள்ள ரெங்கம்மாள் சத்திரம் நரிக்குறவர் காலனியில் சனிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் 150 பேருக்கு சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சாலை விபத்து தடுப்பு,மீட்புச் சங்கம், எஸ்.கே. மருத்துவமனை, சிவாஜி சமூக நலப் பேரவை ஆகியன இணைந்து காலை 10 மணி முதல் 1 மணி வரை இலவசப் பொது மருத்துவ முகாமுக்கு சாலை விபத்து தடுப்பு, மீட்பு சங்கத் தலைவர் மாருதி க. மோகன்ராஜ் தலைமை வகித்தார்.
அரசு மருத்துவர் ஆறுமுகம், மகப்பேறு மருத்துவர் மாலதி ஆகியோர் பங்கேற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 150 பேருக்கு பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த சோகை போன்ற நோய்களுக்கு மருந்து, மாத்திரை அளித்து ஆலோசனை வழங்கினார்.
ஏற்பாடுகளை, சிவாஜி சமூகநலப் பேரவைத் தலைவர் சுப்பையா, மருத்துவமனை மேலாளர் நாகராஜன், சாலை விபத்து தடுப்பு, மீட்பு சங்க நிர்வாகி அ.லெ. சொக்கலிங்கம், தொண்டு நிறுவன இயக்குநர், மருத்துவர் பழனிசாமி, ரோட்டரி பிளாசம் மாவட்ட அனுசரணையாளர் ஜெயமதி ஆகியோர் செய்தனர். செயலர் சேது கார்த்திகேயன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT