புதுக்கோட்டை

முழு அடைப்புக்கு ஆதரவு

DIN

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்.25 -ல் நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு மாவட்டம் முழுவதும் கடைகளை அடைத்து முழு ஆதரவளிப்பதென மாவட்ட வர்த்தகர் கழகம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் மாவட்ட வர்த்தக கழகத் தலைவர் சீனு. சின்னப்பா தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் முழு அடைப்பு நடத்த அரசியல் கட்சிகள் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்றும், தமிழக விவசாயிகள் நலனில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற உணர்வோடும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் அனைவரும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு முழு ஆதரவு தருவது, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வணிகர்கள்,உணவகங்கள், நகைக்கடைகள், அனைத்து இணைப்புச் சங்கங்களும் கடைகளை அடைத்து செய்து ஆதரவு தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கம் முழு ஆதரவு
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப். 25-ல் நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு மாவட்டம் முழுவதும் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கம் ஆட்டோக்களின் இயக்கத்தை நிறுத்தி முழு ஆதரவளிப்பதென அறிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் மாவட்டத் தலைவர் எம். ஜியாவுதீன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில்ல் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் ஏப்.2 அன்று தமிழகத்தில் முழு அடைப்பு நடத்துவதென திமுக, இடதுசாரிகள் அறிவித்துள்ளதற்கு ஆதரவளிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் அனைவரும் ஆட்டோக்களின் இயக்கத்தை நிறுத்தி முழுஅடைப்புப் போராட்டத்துக்கு முழு ஆதரவு தருவது, இதற்கு அனைத்துத் தொழிற் சங்கங்களும் ஆதரவளிக்க வேண்டுகோள் விடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை விளக்கி பொதுச்செயலர் சி. அடைக்கலசாமி, சிஐடியு மாவட்டச் செயலர் க. முகமதலிஜின்னா, துணைத் தலைவர்கள் கே. சிவகுமார், ஜி. சீனிவாசன், கே. குமார், ஆர். மணிமாறன், முருகேசன் உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT