புதுக்கோட்டை

"கொடி நாளுக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும்'

DIN

கொடி நாளுக்கு பொதுமக்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
புதுக்கோட்டை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் வியாழக்கிழமை முன்னாள் படைவீரர்கள் நலத் துறை சார்பில் கொடிநாள் நிதி வசூலை ஆட்சியர் சு. கணேஷ் தொடங்கி வைத்துப் பேசியது:
ஆண்டுதோறும் டிச.  7 படைவீரர் கொடிநாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு கொடிநாள் நிதியாக ரூ. 81.25 லட்சம்  இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ. 1.82 கோடி நிதி வசூலிக்கப்பட்டது.
அதேபோல, நிகழாண்டில் கொடிநாள் நிதிக்கு ரூ. 89.38 லட்சம்  வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் தொகை முன்னாள் படைவீரர், அவர்களைச் சார்ந்தோரின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுறது. எனவே, பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிகவில் கொடிநாள் நிதி வழங்க வேண்டும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி, சார் ஆட்சியர் கே.எம். சரயு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT