புதுக்கோட்டை

பொன்னமராவதி வட்டாரத்தில் வேளாண் பணிகள் ஆய்வு

DIN

பொன்னமராவதி வட்டாரத்தில் நடைபெற்றுவரும் வேளாண் பணிகளை புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜகோபால் மற்றும் துணை இயக்குநர் சேட் முகமது ஆகியோர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
தொடக்கமாக, நல்லூர் கிராமத்தில் நடைபெற்றுவரும் கோடை உழவுப் பணியை வேளாண்மை இணை இயக்குநர் ராஜகோபால் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு கோடை உழவின் பயன்கள் மற்றும் அதனால் மண்ணில் நிகழும் மாற்றங்கள் குறித்து விளக்கினார். அரசமலையில் இயங்கிவரும் தானியங்கி வானிலை மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பொன்னமராவதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கிடங்கில் இருப்பு விவரங்களை ஆய்வு செய்து, நபார்டு வங்கி நிதி உதவியுடன் கட்டப்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க மையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வேளாண்மை உதவி இயக்குநர் எட்வர்ட் சிங், வேளாண்மை அலுவலர் கவிதா, துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மலர்விழி, அருளானந்தம், சதீஷ், அட்மா திட்ட மேலாளர் தேவி, உதவி மேலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT