முகப்பு
புதுக்கோட்டை

திருக்கோகர்ணம்: டெங்கு கொசு ஒழிப்பு பணி ஆய்வு

புதுக்கோட்டை நகராட்சியில் திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள நீர்நிலைகள், வீடுகள், வணிக நிறுவனங்களில் டெங்கு கொசு உருவாகும் காரணிகளைக்

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

புதுக்கோட்டை நகராட்சியில் திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள நீர்நிலைகள், வீடுகள், வணிக நிறுவனங்களில் டெங்கு கொசு உருவாகும் காரணிகளைக் கண்டறிந்து ஒழிக்கும் பணிகளை புதன்கிழமை ஆட்சியர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் கூறியது : தமிழக அரசு டெங்கு காய்ச்சலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணியாளர்கள் தங்களது வழக்கமான பணியுடன் கடந்த 10 நாட்களாக வீடுவீடாகச்சென்று டெங்குகொசு உருவாகும் காரணிகளைக் கண்டறிந்து அழிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இதேபோல், புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 35,000 வீடுகளில் 800 செவிலியர்கள் உட்பட மொத்தம் 1500  பேர் டெங்குகொசு உருவாகும் காரணிகளை அழிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பேரூராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரம்  வீடுகளிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்,  தூய்மையாக பராமரிக்கப்படாத திரையரங்கம், வணிக நிறுவனங்களுக்கும், வீடுகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர்.
இதில், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை,  நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →