புதுக்கோட்டை

மதுக் கூடாரமாக மாறி வரும் கிராம சேவை மையக் கட்டடம்

DIN

பொன்னமராவதி ஒன்றியத்தில் கிராம சேவை மையக் கட்டடங்கள் திறக்கப்படாததால், மது அருந்துவோரின் கூடாரமாக மாறியுள்ளது.
வட்டாட்சியர் அலுவலகம், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் பெறப்படும் கணினி சிட்டா மற்றும் சான்றிதழ்களை கிராம மக்கள் தங்களது கிராமத்திலேயே பெற ஏதுவாக பொன்னமராவதி ஒன்றியத்துக்கு உள்பட்ட 42 ஊராட்சிகளிலும் கிராம சேவை மைய கட்டடங்கள் கட்டப்பட்டன.
கடந்த 2014-15-ஆம் ஆண்டில் ரூ. 14.55 மதிப்பீட்டிலும், 2015-16-ஆம் ஆண்டில் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டிலும் கிராம சேவை மையக் கட்டடங்கள் கட்டப்பட்டன. இதன்மூலம் இணையதளம் மூலம் அரசு சேவைகளை மக்களுக்கு அளிக்கவும், மத்திய அரசின் வாழ்வாதார இயக்க கூட்டமைப்பு குழுக்கள் செயல்பாட்டுக்காகவும் அமைக்கப்பட்ட இம்மையங்கள் இன்று வரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளன.
இதனால் பல இடங்களில் கிராம சேவை மையங்கள் மதுஅருந்துவோரின் கூடாரமாக மாறிவருகிறது. மேலும், பயன்பாடு, பராமரிப்பின்றி கட்டடங்களும் சேதமடைந்து வருகின்றன. எனவே, கிராம சேவை மையங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT