புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் கட்டுமானப் பணிகள் பாதிப்பு

DIN

கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  கட்டடப் பணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக கட்டுமானத் தொழிலாளர்கள் வேதனையடைகின்றனர்.  
ஆற்று மணல் தட்டுப்பாடு அதிகரித்து, விலையும் அதிகரித்துள்ளது. ஒரு லோடு ஆற்று மணல் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன. இந்த விலை ஏற்றம் குறித்து மணல் லாரி உரிமையாளர்கள் கூறுகையில், முன்புபோலன்றி ஒரு லோடு மணல் அள்ளுவதற்கு பத்து நாள்களுக்கும் மேலாக ஆற்றுப் பகுதிகளில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மணலை சேமித்து விற்பனை செய்வர்கள் விலை அதிகரித்து வருகின்றனர்.  
இந்த மணல் தட்டுப்பாட்டால் கொத்தனார், சித்தாள், சென்ரிங் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் வேலையின்றி பரிதவிக்கும் நிலையில் உள்ளனர். மணல் தட்டுபாட்டினைப் போக்கி கட்டடப் பணிகள் தொய்வின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படுமா எனத் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT