ஆலங்குடியில் இலவச மடிக்கணினி வழங்கல்
ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் எல்.என்.புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் எல்.என்.புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று, பள்ளி மாணவ, மாணவிகள் 96 பேருக்கு மடிக்கணினியை வழங்கி பேசினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னத்துரை, பொருளாளர் சண்முகம், ஊராட்சி முன்னாள் தலைவர் சுந்தர்.முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.