ஆளுநரின் செயல்பாடு அரசமைப்பு சட்டத்தை மீறிய செயல்: திமுக எம்.பி. சிவா பேச்சு
தமிழக ஆளுநரின் செயல்பாடு அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு முரணானது. ஆளுநரின் அதிகார வரம்புக்கு மீறியது என்றார் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா.
புதுக்கோட்டைஆளுநரின் செயல்பாடு அரசமைப்பு சட்டத்தை மீறிய செயல்: திமுக எம்.பி. சிவா பேச்சு
தமிழக ஆளுநரின் செயல்பாடு அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு முரணானது. ஆளுநரின் அதிகார வரம்புக்கு மீறியது என்றார் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா.
தமிழக ஆளுநரின் செயல்பாடு அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு முரணானது. ஆளுநரின் அதிகார வரம்புக்கு மீறியது என்றார் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா.
புதுகை திலகர் திடலில், மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ணனின் 21 ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
மத்திய பாஜக அரசு தமிழக அரசை பின்னணியில் இருந்து இயக்கிவருகிறது என்பதை தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் நிரூபித்துள்ளன. தமிழக ஆளுநரின் செயல்பாடு அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு முரணானது. ஆளுநரின் அதிகார வரம்புக்கு மீறியது. இந்தியா என்பது கூட்டாட்சி தத்துவத்தில் இயங்க வேண்டிய நாடு. மாநிலத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
மதுக்கடை விவகாரத்தில் மட்டுமல்ல, பல்வேறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் பல கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. போக்குவரத்துக் கழக அலுவலகங்கள், பேருந்துகள் ஆகியவைகளை அடகு வைத்துள்ள ஆட்சி, தற்போது நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவப் பள்ளி குறித்து பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கல்வித் தரத்தைப் பற்றி தான் கருத்து சொல்லியிருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு, நகரச்செயலர் க. நைனாமுகமது தலைமை வகித்தார். நிர்வாகி ரெத்தினம் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ-க்கள் பெ. மாரியய்யா, ரா.சு. கவிதைப்பித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுகை எம்எல்ஏ- பெரியண்ணன்அரசு, நிர்வாகிகள் த. சந்திரசேகரன், சி. முத்துச்சாமி, எம்.எம். அப்துல்லா, கீரை.தமிழ்ராஜா உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட துணைச்செயலர் க. மதியழகன் நன்றி கூறினார்.