இன்று பள்ளிகளில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பள்ளிகளில் புதுகை வாசிக்கிறது எனும் புத்தகங்களை வாசிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பள்ளிகளில் புதுகை வாசிக்கிறது எனும் புத்தகங்களை வாசிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் வரவேற்புக்குழு தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி வெளியிட்டுள்ள தகவல்: புதுகையில் நடைபெறவுள்ள 2 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நவம்பர் 24 முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை புதுகை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும், புதுகை வாசிக்கிறது எனும் மாபெரும் வாசிப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை (17.11.2017) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைபெறுகிறது. ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த வாசிப்புத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தொடங்கி வைக்கிறார். அதில், சார் ஆட்சியர் கே.எம். சரயு, முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். செந்திவேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.