முகப்பு
புதுக்கோட்டை

பேருந்து நிலையத்தில்  கழிவறை கட்டித்தர  நடவடிக்கை

கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் ரூ. 15 லட்சம் செலவில் கழிவறை கட்டித்தரப்படும் என்றார் தொகுதி எம்எல்ஏ நார்த்தாமலை பா. ஆறுமுகம். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் ரூ. 15 லட்சம் செலவில் கழிவறை கட்டித்தரப்படும் என்றார் தொகுதி எம்எல்ஏ நார்த்தாமலை பா. ஆறுமுகம். 
கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கழிவறை அமைத்துத் தரக்கோரி  அப்பகுதி பொதுமக்கள் எம்எல்ஏ-விடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இதையடுத்து தொகுதி எம்எல்ஏ  நார்த்தாமலை பா. ஆறுமுகம், பேருந்து நிலையத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்து, தனது தொகுதி நிதியிலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கி கழிப்பறை கட்ட உத்தரவிட்டார். மேலும் கந்தர்வகோட்டை காந்திசிலை பேருந்து நிறுத்தம் அருகே ரூ. 10 லட்சத்தில் பேருந்து நிறுத்தம், நிழற்குடை அமைக்கவும் உத்தரவிட்டார்.  ஆய்வின்போது, கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் ஆர். ரெங்கராஜன், ஊராட்சிச் செயலாளர் அய்யா. செந்தில்குமார், நகரச் செயலாளர் என். ராமநாதன், குமார்,  கோவிந்தராஜ், எம். தமிழழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →