முகப்பு
புதுக்கோட்டை

தேசிய ராணுவப் பயிற்சி முகாம்: புதுகை என்சிசி மாணவர்கள் சிறப்பிடம்

தேசிய அளவில் என்சிசி மாணவர்களுக்காக நடைபெற்ற இந்திய ராணுவப் பயிற்சி முகாமில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி என்சிசி மாணவர்கள் சிறப்பு பரிசுகளை வென்றுள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

தேசிய அளவில் என்சிசி மாணவர்களுக்காக நடைபெற்ற இந்திய ராணுவப் பயிற்சி முகாமில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி என்சிசி மாணவர்கள் சிறப்பு பரிசுகளை வென்றுள்ளனர்.
ஹிமாச்சல பிரதேச மாநிலம்,  மணாலியிலும்,  தெலங்கானா மாநிலம்,  போவேன் பல்லி ஆகிய இரு இடங்களில் செப்டம்பர் மாதம் தேசிய அளவில் என்.சி.சி  மாணவர்களுக்காக நடைபெற்ற இந்திய ராணுவப் பயிற்சி முகாமில்  கலந்து கொள்வதற்கு காரைக்குடி- 9 - தமிழ்நாடு - என்.சி.சி - படைப்பிரிவிலிருந்கு  தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட புதுக்கோட்டை  மன்னர் கல்லூரி என்.சி.சி தரைப்படைப் பிரிவைச் சேர்ந்த மூன்றாமாண்டு  மாணவர்கள் வெற்றிக்குமார், பெரமையா,  சுபாஷ் ஆகியோர் துப்பாக்கிச் சுடுதல், மலையேறுதல், பனிமலைச் சறுக்குதல், தாற்காலிக கூடாரம் அமைத்தல்,  தேசிய ஒருமைப்பாட்டு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை வென்றனர். பரிசுகள், பதக்கங்கள்,  சான்றிதழ்கள் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களை, கல்லூரியின் முதல்வர்  ஆர். தியாகராஜன், என்.சி.சி- தரைப்படைப் பிரிவு அலுவலர் ஆர். பகுத்தறிவாளன், பேராசிரியர்கள்  வாழ்த்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →