புதுக்கோட்டை

திறனறியும் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

DIN

புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில்  9  மற்றும் 10-ஆம்  வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட  திறன் வளர்ப்புப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு வியாழக்கிழமை பரிசளிக்கப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற  நிகழ்வில் சிறப்பு விருந்தினராக  புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  ச.செந்தில்வேல்முருகன் பங்கேற்று  போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.
 பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஒப்பித்தல் போட்டி (தமிழ்-ஆங்கிலம்), அறிவியல் மாதிரி செயல் திட்ட போட்டி, விளையாட்டு ஆகிய போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 400  -க்கும் மேற்பட்ட மாணவ,  மாணவிகள்  ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பேச்சுப்போட்டி,  கட்டுரைப்போட்டி, ஒப்பித்தல் போட்டி (தமிழ்,ஆங்கிலம்)-களில் வெற்றி பெற்றவர்களுக்கு  முறையே ரூ. 3,000,  ரூ.2, 000, ரூ.1,000 ரொக்கப் பரிசுகளும், அறிவியல் மாதிரி செயல் திட்ட போட்டி, விளையாட்டில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  முறையே ரூ.5000,ரூ.3000, ரூ.2000 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கல்லூரித் தலைவர் கவிஞர் கதிரேசன் தலைமை வகித்து,  பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். அதில், தாளாளர் பி. கருப்பையா, முதல்வர் கலியபெருமாள்  ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர். இப்போட்டியில் பங்கேற்ற  மாணவர்களுக்கு வசதியாக  பல்வேறு பகுதிகளில் இருந்தும் கல்லூரியின் வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT