முகப்பு
புதுக்கோட்டை

காய்ச்சல்: புதுகை மருத்துவமனையில்  118 பேர் அனுமதி: 6 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி

புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள 118 பேரில் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள 118 பேரில் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவக்கல்லூரி  முதல்வர் எஸ். சாரதா தெரிவித்தார்.
தஞ்சை செல்லும் வழியில் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வியாழக்கிழமை  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனை முதல்வர் எஸ். சாரதா,  நோயாளிகளிடம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் தஞ்சைக்கு அமைச்சர் புறப்பட்டார். தொடர்ந்து கல்லூரி முதல்வர்  எஸ். சாரதா அளித்த பேட்டி:  புதுகை மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில்  6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருவர் கூட டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழக்கவில்லை.
இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்ட  40 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்றார்.
மேலும், ஆய்வின்போது மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளர் சேதுராமன் என்பவரை சரிவர பணியாற்றாததால், அமைச்சர்  பணி நீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →